சச்சின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி

தினகரன்  தினகரன்
சச்சின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி

கவுகாத்தி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி சர்வதேச போட்டிகளில் தனது 60-வது சதத்தை நேற்று நிறைவு செய்தார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் அடித்துள்ள அவருக்கு இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளும் அடங்கும். இதன்மூலம்  குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பூர்த்தி செய்தோர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி விராட் கோஹ்லி முதல் இடத்தை பிடித்தார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை