விஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்

தினகரன்  தினகரன்
விஜய் ஹசாரே டிராபி மும்பை சாம்பியன்

பெங்களூரு: விஜய் ஹசாரே டிரா ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில்ம் டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. டெல்லி அணி 45.4 ஓவரில் 177 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஹிம்மத் சிங் அதிகபட்சமாக 41 ரன் விளாசினார். ஷோரி 31, சுபோத் 25, பவான் நேகி 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். கேப்டன் கம்பீர் 1 ரன்னில் ஆட்டமிழந்து மாற்றமளித்தார். மும்பை பந்துவீச்சில் தவால் குல்கர்னி, ஷிவம் துபே தலா 3, தேஷ்பாண்டே 2, முலானி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மும்பை அணி 7.4 ஓவரில் 40 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், சித்தேஷ் லாட் - ஆதித்யா தாரே ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 105 ரன் சேர்த்தது. தாரே 71 ரன் (89 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), லாட் 48 ரன் (68 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். மும்பை அணி 35 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து வென்றது. துபே 19 ரன், குல்கர்னி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் சாய்னி 3, கெஜ்ரோலியா, மனன் ஷர்மா, லலித் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆதித்யா தாரே ஆட்ட நாயகன் விருது பெற்றார். 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய மும்பை அணி விஜய் ஹசாரே டிராபியை கைப்பற்றியது.

மூலக்கதை