பிரபாஸ் பிறந்த நாளில் மேக்கிங் வீடியோ

தினமலர்  தினமலர்
பிரபாஸ் பிறந்த நாளில் மேக்கிங் வீடியோ

பாகுபலி-2 படத்தை அடுத்த பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தடுத்து பிரமோஷன் வெளியீடுகளை பிரபாஸின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள். அதனால் அக்டோபர் 23-ம் தேதி தனது பிறந்த நாளில் சாஹோ படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளார் பிரபாஸ். இந்த படம் 2019-ல் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.

மூலக்கதை