2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு

தினமலர்  தினமலர்
2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு

ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. இப்படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 27ம் தேதி துபாயில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது.

'எந்திர லோகத்து சுந்தரியே..., ராஜாளி...' என்ற அந்த இரண்டு பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ரகுமான் இதற்கு முன் இசையமைத்த பாடல்களின் டியூன்களைப் போலவே அந்தப் பாடல்கள் இருந்ததாக விமர்சனம் எழுந்தது. இப்போது சுமார் ஒரு வருடம் கழித்து அந்தப் பாடல்களின் 'லிரிக் வீடியோ', அதாவது பாடல் வரிகள் வீடியோவை நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளார்கள்.

இப்படத்தில் உள்ள மூன்றாவது பாடலை இன்னும் வெளியிடவில்லை. நா.முத்துக்குமார் எழுதிய 'புல்லினங்காள்...'பாடலை எப்போது வெளியிடுவார்கள் என்று தெரியவில்லை.

2.0 படத்தின் டீசர் கடந்த மாதம் வினாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்பட்டது. தமிழை விட ஹிந்தி டீசர் யு டியுபில் அதிகப் பார்வைகளைப் பெற்றது. நாளைய லிரிக் வீடியோவில் படத்தின் மேலும் சில புகைப்படங்கள் அதன் மூலம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

மூலக்கதை