‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.9,516 கோடியாக உயர்வு

தினமலர்  தினமலர்
‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.9,516 கோடியாக உயர்வு

புதுடில்லி : முகேஷ் அம்­பா­னி­யின், ‘ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ்’ நிறு­வ­னத்­தின் நிகர லாபம், ஜூலை – செப்., வரை­யி­லான இரண்­டா­வது காலாண்­டில், 17.4 சத­வீ­தம் அதி­க­ரித்து, 9,516 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

இது, கடந்த ஆண்டு, இதே காலாண்­டில், 8,109 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், வரு­வாய், 54.5 சத­வீ­தம் உயர்ந்து, 1,56,291 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது. இதன் சில்­லரை விற்­பனை பிரி­வின் லாபம், 213 சத­வீ­தம் உயர்ந்து, 1,392 கோடி­யா­க­வும், வரு­வாய் இரு மடங்கு அதி­க­ரித்து, 32,436 கோடி ரூபா­யா­க­வும் உயர்ந்­துள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டின், ஜூலை – செப்., வரை­யி­லான இரண்­டா­வது காலாண்­டில், ‘ரிலை­யன்ஸ் ஜியோ’ நிறு­வ­னத்­தின் நிகர லாபம், முதல் காலாண்டை விட, 11.3 சத­வீ­தம் உயர்ந்து, 681 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது. கடந்த நிதி­யாண்­டின் இரண்­டா­வது காலாண்­டில், இந்­நி­று­வ­னம், 271 கோடி ரூபாய் இழப்பை கண்­டி­ருந்­தது.மதிப்­பீட்டு காலாண்­டில், ரிலை­யன்ஸ் ஜியோ வாடிக்­கை­யா­ளர் எண்­ணிக்கை, 25.23 கோடி­யாக உயர்ந்­துள்­ளது.

ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்­தின், பெட்­ரோ­லிய ரசா­யன பொருட்­கள் பிரி­வின் லாபம், 63.7 சத­வீ­தம் உயர்ந்து, 8,120 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு பிரிவு வரு­வாய், 19.6 சத­வீ­தம் குறைந்து, 5,322 கோடி ரூபா­யாக சரிந்­துள்­ளது; இழப்பு, 480 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. ரிலை­யன்ஸ், 5,230 கோடி ரூபாய் முத­லீட்­டில், கம்­பி­வட இணைய சேவை­யில் ஈடு­பட்­டுள்ள, ‘ஹாத்வே கேபிள், டென் நெட்­ஒர்க்ஸ், டாடா­காம்’ நிறு­வ­னங்­களில் குறிப்­பி­டத்­தக்க பங்­கு­களை வாங்க உள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

25 கோடி சந்­தா­தா­ரர்­கள் :
ரிலை­யன்ஸ் சில்­லரை விற்­பனை பிரிவு வரு­வாய், இரு மடங்கு உயர்ந்­துள்­ளது. ஆர்­ஜியோ வரு­வாய், 2.5 மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. ஆர்­ஜியோ வாடிக்­கை­யா­ளர் எண்­ணிக்கை, 25 கோடியை தாண்டி விட்­டது. உல­கில், மொபைல் போன் தர­வு­கள் பரி­வர்த்­த­னை­யில், ஆர்­ஜியோ தொடர்ந்து முத­லி­டத்­தில் உள்­ளது.

-முகேஷ் அம்­பானி

மூலக்கதை