2018 சீசனில் 2வது பட்டம் லியாண்டர் பயஸ் அசத்தல்

தினகரன்  தினகரன்
2018 சீசனில் 2வது பட்டம் லியாண்டர் பயஸ் அசத்தல்

சான்டோ டொமிங்கோ: டொமினிகன் குடியரசில் நடைபெற்ற சான்டோ டொமிங்கோ ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில்  இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மிகுவெல் ஏஞ்சல் (மெக்சிகோ) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.இறுதிப் போட்டியில் ஏரியல் பெஹர் (உருகுவே) - ராபர்டோ குயிரோஸ் (ஈகுவடார்) ஜோடியுடன் மோதிய பயஸ் ஜோடி 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை  இழந்து பின் தங்கியது. எனினும், அடுத்த 2 செட்களிலும் அபாரமாக விளையாடிய பயஸ் - ஏஞ்சல் இணை 4-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் 1 மணி, 26  நிமிடம் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.நடப்பு சீசனில் லியாண்டர் (45 வயது) வென்ற 2வது ஏடிபி சேலஞ்சர் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை