இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வெல்லப் போவது யார்?

PARIS TAMIL  PARIS TAMIL
இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வெல்லப் போவது யார்?

நாளை நடைபெறும் ஆப்கானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டி வெற்றுப் போட்டியாக இருந்தாலும் ஆப்கான் அணி மிகவும் பொறுப்பாக, சீரியஸாக ஆடவே முயற்சிக்கும். இந்திய அணியைப் பொறுத்தவரையில் இன்னொரு வெற்றியுடன் கிளீனாக இறுதிக்குள் நுழைவதை முனைப்பாக கொண்டிருக்கும்.
 
ஆப்கானிஸ்தானின் ஸ்பின் மூவர் கூட்டணியான ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், மொகமது நபி ஆகியோர் நினைத்தால் அன்றைய தினத்தில் எந்த ஒரு அணியையும் தங்களது துல்லியமான பந்து வீச்சினால் கவிழ்க்கும் திறமை கொண்டவர்கள்.
 
இந்திய வீரர்கள் முன்னைப்போல் ஸ்பின் பந்து வீச்சை அவ்வளவு சிறப்பாக ஆடுவதில்லை, ரோஹித் சர்மாவே லெக்ஸ்பின்னுக்குத் திணறுபவர், சில முறை ஆட்டமிழந்திருப்பவர், கோலியின் ஸ்பின் பலவீனத்தை ஐபிஎல் முதலாகவே பார்த்து வருகிறோம் இப்போது இங்கிலாந்து தொடரில் மொயின் அலியிடம் மடிந்ததையும் நேதன் லயனிடம் ஆஸி.யிலும் சமீபத்தில் இந்தியாவிலும் திணறியதைப் பார்த்து வருகிறோம்.
 
இந்நிலையில் ஒன்று மேலதிக ஆக்ரோஷமாக ஆடப்போய் விக்கெட்டுகளை இந்திய அணி இழக்கலாம். அல்லது மேலதிக எச்சரிக்கையின் காரணமாகவும், பம்மலாட்டம் மூலமாகவும் காலியாக வாய்ப்புள்ளது, எனவே இதை ஆப்கான் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
 
2வதாக இந்திய மிடில் ஆர்டர்கள் இதுவரை சரியான சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அம்பாத்தி ராயுடு மட்டுமே கொஞ்சம் பார்மில் உள்ளார். மற்றபடி கேதார் ஜாதவ், தோனி, கார்த்திக், ஆகியோருக்கு அதிக ஓவர்கள் பேட் செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை.. இந்நிலையில் நாளை முஜிபுர், ரஷீத் இணைந்து தவணையும், ரோஹித்தையும் விரைவில் வீழ்த்திவிட்டால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலில்லாமல் ஆடுமா என்பது சோதிக்கப்படவில்லை.
 
3வதாக இது வெற்றுப் போட்டியாக இருப்பதால் இந்திய அணி தன் பெஞ்ச் வலுவைச் சோதிக்கும் முயற்சியில் கலீல் அகமட், மணீஷ் பாண்டே, தீபக் சாஹர் என்று சோதனை முயற்சி மேற்கொண்டால் ஆப்கான் இவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது, இதன் மூலம் இந்திய அணியை மட்டுப்படுத்தும் வாய்ப்புள்ளது.

மூலக்கதை