5 நாட்களில் ரூ. 8.50 லட்சம் கோடி; பங்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு

தினமலர்  தினமலர்
5 நாட்களில் ரூ. 8.50 லட்சம் கோடி; பங்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு

புதுடில்லி : கடந்த ஐந்து வர்த்­தக தினங்­களில், மும்பை பங்­குச் சந்தை நிறு­வ­னங்­களின் பங்கு மதிப்பு வீழ்ச்­சி­யால், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, 8.50 லட்­சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் இறக்­கு­மதி வரி உயர்வு, கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம், வெளி­யேறி வரும் அன்­னிய பங்கு முத­லீடு, டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு சரிவு போன்­ற­வற்­றால், பங்­குச் சந்தை சரி­வைக் கண்டு வரு­கிறது. இவற்­று­டன், உள்­நாட்­டில், நிதி மற்­றும் வீட்டு வசதி கடன் நிறு­வ­னங்­களின் பணப்­பு­ழக்­கம் குறை­யும் என்ற தக­வல் கார­ண­மாக, கடந்த வார இறு­தி­யில் பங்­குச் சந்தை கடு­மை­யாக சரி­வ­டைந்­தது.

இதை தடுக்க, மத்­திய அரசு, செபி, ரிசர்வ் வங்கி ஆகி­ய­வற்­றின் அறிக்­கை­கள் வெளி­யா­யின. இந்­நி­லை­யில், நேற்று பங்கு வர்த்­த­கத்­தின் போது, சீனா, வரி உயர்வு தொடர்­பாக, அமெ­ரிக்கா உட­னான பேச்சை, ரத்து செய்து விட்­ட­தாக தக­வல் பர­வி­யது. இத­னால், சர்­வ­தேச வர்த்­த­கப் போர் மேலும் தீவி­ர­மா­கும் என்ற அச்­சத்­தில், முத­லீட்­டா­ளர்­கள், பங்­கு­களை விற்­பனை செய்­த­னர்.

இதன் கார­ண­மாக, மும்பை பங்­குச் சந்­தை­யில், 2,111 நிறு­வ­னங்­களின் பங்கு விலை, வீழ்ச்சி கண்­டது. இச்­சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, 500 புள்­ளி­க­ளுக்­கும் மேலாக சரிந்­தது. ஐந்து வர்த்­தக தினங்­க­ளாக சரிவு தொடர்­வ­தால், மும்பை பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வன பங்­கு­களின் சந்தை மதிப்பு, 8 லட்­சத்து,47 ஆயி­ரத்து, 974 கோடி ரூபாய் குறைந்து, 1 கோடியே,47 லட்­சத்து, 89ஆயி­ரத்து, 45 கோடி ரூபா­யாக சரிந்­துள்­ளது.

மூலக்கதை