சில்லரை கடனில் முன்னிலை வகிக்கும் தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா

தினமலர்  தினமலர்
சில்லரை கடனில் முன்னிலை வகிக்கும் தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா

மும்பை : கடந்த ஜூன், 30 நில­வ­ரப்­படி, நாட்­டில் வழங்­கப்­பட்ட மொத்த சில்­லரை கடன்­களில், தமி­ழ­கம், மஹா­ராஷ்­டிரா, கர்­நா­டகா ஆகிய மூன்று மாநி­லங்­கள், 40 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ள­தாக ஆய்­வொன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.

தனி நபர் கடன், நுகர்­வோர் சாதன கடன், கல்வி கடன், வாகன கடன் உள்­ளிட்­டவை, சில்­லரை கடன் பிரி­வில் அடங்­கி­உள்ளன. இப்­பி­ரிவு குறித்து, கடன் மதிப்­பீட்டு நிறு­வ­ன­மான, ‘டிரான்ஸ்­யூ­னி­யன் சிபில்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த ஜூன் நில­வ­ரப்­படி, சில்­லரை கடன் வழங்­கி­ய­தில், மஹா­ராஷ்­டிரா, 5,50,200 கோடி ரூபா­யு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது. இது, மொத்த சில்­லரை கட­னில், 20 சத­வீ­த­மா­கும். அடுத்த இடங்­களில், தமி­ழ­கம் மற்­றும் கர்­நா­டகா, முறையே, 2,77,400 கோடி மற்­றும் 2,74,900 கோடி ரூபா­யு­டன் உள்ளன.

மொத்த சில்­லரை கட­னில், 10 மாநி­லங்­கள், 21,27,400 கோடி ரூபா­யு­டன், 76 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்ளன. கடந்த ஆண்டு, ஏப்., – ஜூன் காலாண்டை விட, இந்­தாண்டு, இதே காலாண்­டில், சில்­லரை கடன்­கள், 27 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்ளன. இதில், தனி நபர் கடன், ‘கிரெ­டிட் கார்டு’ கடன் ஆகி­ய­வற்­றின் வளர்ச்சி, முறையே, 43 சத­வீ­தம் மற்­றும் 42 சத­வீ­த­மாக உள்­ளது. வீட்டு வசதி கடன் மற்­றும் கிரெ­டிட் கார்டு கடன் பிரி­வில், தவணை செலுத்த தவ­று­வது அதி­க­ரித்து வரு­கிறது. அதே­ச­ம­யம், வாகன கடன், தனி நபர் கடன், இரு சக்­கர வாகன கடன் ஆகி­ய­வற்­றில் குறைந்து வரு­கிறது இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

தேவை அதி­க­ரிப்பு :
பெருகி வரும் நுகர்­வோ­ரின் கடன் தேவை, கடன் வழங்­கு­வோ­ரின் வளர்ச்­சிக்கு உத­வு­கிறது. கடன் தவணை தவ­று­வ­தும், கட்­டுக்­குள் உள்­ளது. இத­னால், சில்­லரை கடன் பிரிவு வளர்ச்சி கண்டு வரு­கிறது
–யோகேந்­திர சிங், துணை தலை­வர், ஆய்வு பிரிவு, டிரான்ஸ்­யூ­னி­யன் சிபில்

மூலக்கதை