பி.எஸ்.என்.எல்., ‘5ஜி’ சேவை

தினமலர்  தினமலர்
பி.எஸ்.என்.எல்., ‘5ஜி’ சேவை

‘‘இந்­தி­யா­வில், ‘5ஜி’ தொழில்­நுட்­பத்தை அறி­மு­கப்­ப­டுத்த, ‘சாப்ட்­பேங்க் மற்­றும் என்.டி.டி., கம்­யூ­னி­கே­ஷன்’ நிறு­வ­னங்­க­ளு­டன், பி.எஸ்.என்.எல்., ஒப்­பந்­தம் செய்­துள்­ளது,’’ என, பி.எஸ்.என்.எல்., தலை­வ­ரும், நிர்­வாக இயக்­கு­ன­ரு­மான, அனு­பம் ஸ்ரீவஸ்­தவா தெரி­வித்­து உள்­ளார்.

இது குறித்து, தன், ‘டுவிட்­டர்’ பக்­கத்­தில் அவர் பதிவு செய்­துள்ள விப­ரம்: பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம், 5ஜி தொழில்­நுட்­பத்தை மேம்­ப­டுத்த, ஜப்­பான் நிறு­வ­னங்­க­ளான, சாப்ட்­பேங்க் மற்­றும் என்.டி.டி., கம்­யூ­னி­கே­ஷன் நிறு­வ­னங்­க­ளு­டன் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது. இதை அறி­விப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன்.

இந்­தி­யா­வில் பரி­சோ­தனை அடிப்­ப­டை­யில், 5ஜி சேவையை எங்கு பயன்­ப­டுத்­து­வது என்­பது உள்­ளிட்ட களப்­பணி ஆய்­வு­களை துவங்­கு­வ­தற்­கான இறு­திக்­கட்ட பணி­களில் உள்­ளோம். இவ்­வாறு ஸ்ரீவஸ்­தவா தெரி­வித்­துள்­ளார்.

– நமது நிரு­பர் –

மூலக்கதை