SAMU அதிகாரிகளுக்கு குண்டு துளைக்காத ஆடை!!

PARIS TAMIL  PARIS TAMIL
SAMU அதிகாரிகளுக்கு குண்டு துளைக்காத ஆடை!!

அவசர சிகிச்சை பிரிவு SAMU மருத்துவர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கப்பட உள்ளன. Var மாவட்டத்தில் முதல்கட்டமாக வழங்கப்பட உள்ளது. 
 
SAMU மருத்துவர்கள் உதவியாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றது. மனநலம் பாதிக்கப்பட்ட சில நபர்கள் ஆயுதங்களால் தாக்குவதாகவும், வன்முறைகள் இடம்பெற்ற இடங்களுக்குச் செல்லும் போது, தாக்குதலாளி தாக்கக்கூடும் என்பதாலும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Var மாவட்டத்தில் ஒரு சில உதவிகளின் போது SAMU மருத்துவர்கள் குண்டு துளைக்காத ஆடைகளை அணிந்துகொள்வார்கள் எனவும், விரைவில் அவர்களுக்கு உடைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மூன்று பேர்கொண்ட ஒரு குழுவில் மருத்துவர், தாதியர், நோயாளர் காவு வண்டி சாரதி என மூவருக்கும் இந்த உடை வழங்கப்பட உள்ளது. இத்தகவலை SAMU 83 உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மூலக்கதை