இரண்டாவது முறையாக பாகிஸ்தானை பிரித்து மேய்ந்து இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதி பெற்றது இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரண்டாவது முறையாக பாகிஸ்தானை பிரித்து மேய்ந்து இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதி பெற்றது இந்தியா

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல  தகுதி பெற்றுள்ளது. ஆசிய கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.   டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

சோயப் மாலிக் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். அனுபவ், ஷோயப் மாலிக் இணைந்து 107 ரன்களுக்கு கூட்டணி அமைத்து ரன்கள் சேர்த்தனர்.

அதிக ரன்கள் அடிக்க முற்பட்டு, 39வது ஓவர் முதல் அந்த அணி மீண்டும் விக்கெட்களை இழக்கத் துவங்கியது. சர்ப்ராஸ் 44, மாலிக் 78, ஆசிப் அலி 30, ஷதாப் கான் 10 ரன்களில் வெளியேறினர்.



பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல், குல்தீப் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

சர்ப்ராஸ் 44 ரன்களும், ஃபகர் ஜமான் 31 ரன்களும் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, சஹால், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 238 ரன்கள் இலக்கை நோக்கி தன் பேட்டிங்கை துவங்கியது இந்தியா.

தவான், ரோஹித் இருவரும், முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்து கலக்கினர். தவான் சதம் அடித்து தெறிக்க விட்டார்.

எனினும், அடுத்த சில நிமிடங்களில் 114 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆனார் தவான். ரோஹித் அடுத்து சதம் அடித்தார்.



மேலும், ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்களை கடந்து புதிய சாதனை செய்தார் ரோஹித். பந்துவீச்சில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத பாகிஸ்தான் அணி, கடும் அழுத்தத்தில் இருந்தது.

ரோஹித் கொடுத்த இரண்டு கேட்ச்களை கோட்டை விட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். 39. 3 ஓவர்களில் இந்தியா வெற்றிக்கு தேவையான 238 ரன்களை எட்டியது.

பாகிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து, இருவரும் சதம் விளாசினர். ஷிகர் தவான்-ரோஹித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்தனர்.

ஷிகர் தவான் 114 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இந்திய அணி 39. 3 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

ரோஹித் சர்மா 111 ரன்களுடனும், ராயுடு 12 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சூப்பர்4 சுற்றில் 2 வெற்றிகளைப் பெற்றுள்ளதால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

.

மூலக்கதை