சற்று முன் : Bois de Vincennes இல் பாரிய சத்தத்துடன் எரிவாயு வெடிப்பு! - பல அதிகாரிகள் காயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சற்று முன் : Bois de Vincennes இல் பாரிய சத்தத்துடன் எரிவாயு வெடிப்பு!  பல அதிகாரிகள் காயம்!!

சற்று முன் ஏற்பட்ட விபத்தொன்றில் பல தீயணைப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். Bois de Vincennes இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 23 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Bois de Vincennes (Val-de-Marne) இல் எரிவாயு குடுவை ஒன்று வெடித்து, பல தீயணைப்பு படை அதிகாரிகளும், இராணுவத்தினரும் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரு தீயணைப்பு வீரர்கள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
வீடற்றவர்களுக்கான தங்குமிடம் ஒன்றில் இருந்து அவர்களை வெளியேற்றம் செய்தபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. 
 
பாரிய சத்தத்துடன் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகவும், அக்கம் பக்கத்தினர் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் வெளியாகும்.

மூலக்கதை