இல்-து-பிரான்சுக்குள் அடைமழை! - புயல் எச்சரிக்கை!!

PARIS TAMIL  PARIS TAMIL
இல்துபிரான்சுக்குள் அடைமழை!  புயல் எச்சரிக்கை!!

இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, இல்-து-பிரான்சுக்குள் அடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
 
இன்று காலையில் இருந்து இல்-து-பிரான்சுக்குல் நிலவி வரும் கடும் வெப்பத்தை தொடர்ந்து, நண்பகலுக்கு பின்னர் கடும் புயல் காற்றுடன் அடை மழை பெய்யும் என பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. மணிக்கு 50 கி.மீ இல் இருந்து 90 கி.மீ வரையான வேகத்தில் புயல் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர இன்று நள்ளிரவு வரை இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
பரிசுக்குள் அடை மழை பெய்யும் எனவும், பரிஸ் நகர மக்களை அவதானத்துடன் இருக்கும் படியும் கோரப்பட்டுள்ளது. தவிர, இல்-து-பிரான்சுக்குள் மின் தடை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக Grand-Est மாகணத்துக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அங்கும் அடை மழையும், மணிக்கு 100 கி.மீ வரை புயற்காற்றும் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை