மைதானத்தில் கதறி அழுத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

PARIS TAMIL  PARIS TAMIL
மைதானத்தில் கதறி அழுத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

ஆசியக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, போட்டி முடிந்ததும் ஆப்கான் வீரர் அழுதததால், அவரை பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறியுள்ளார்.
 
தற்போது நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாரத வகையில் ஆப்கானிஸ்தான் அணி விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது. இலங்கை அணி மற்றும் வங்கதேச அணியை அடுத்தடுத்து புரட்டி எடுத்தது.
 
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியுடன், ஆப்கானிஸ்தான் மோதியது. இப்போட்டியை பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் போராடி தான் வென்றது.
 
இதையடுத்து போட்டி முடிந்ததும் ஆப்கான் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்கிக் கொண்டிருந்தனர். போட்டியின் கடைசி ஓவரை வீசிய ஆப்கானிஸ்தான் வீரர் அப்தாப் ஆலம் மனமுடைந்து தனது டீசர்ட்டின் ஒரு முனையை வைத்து முகத்தை மறைத்தபடி ஆடுகளத்துக்கு அருகில் மண்டியிட்டு அழுதுகொண்டிருந்தார்.
 
உடனே இதைக் கண்ட பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் அவரை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். சோயிப் மாலிக்கின் இந்தச் செயல் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
 
இந்தச் சம்பவம் குறித்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

மூலக்கதை