ஹசன் அலிக்கு அபராதம் | செப்டம்பர் 22, 2018

தினமலர்  தினமலர்
ஹசன் அலிக்கு அபராதம் | செப்டம்பர் 22, 2018

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் வீரர்களுக்கான விதிகளை மீறிய பாகிஸ்தானின் ஹசன் அலி, ஆப்கானிஸ்தானின் அஸ்கர், ரஷித் கானுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அபுதாபியில் நடந்த ‘சூப்பர்–4’ சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இதில் ஹசன் அலியின் 33வது ஓவரின் 5வது பந்தை ஹஸ்மதுல்லா அடித்தார். இதை பிடித்த ஹசன் அலி, மீண்டும் பேட்ஸ்மேனை நோக்கி ஆக்ரோஷமாக எறிய முயற்சித்தார். இதற்கு பதிலடி தரும்விதமாக, (37வது ஓவர்) ரன் எடுக்க ஓடிய ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர், பவுலர் ஹசன் அலியின் தோள் மீது மோதி சென்றார். 

ஆர்ப்பரித்த ரஷித்

இதைப்போல, ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் 47வது ஓவரில் ஆசிப் அலியை அவுட்டாக்கி ஆக்ரோஷமான முறையில் ஆர்ப்பரித்தார். இது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) வீரர்களுக்கான விதிகளை மீறிய செயல். இதனால், ஹசன் அலி, ஆப்கானிஸ்தானின் அஸ்கர், ரஷித் கானுக்கு தலா 15 சதவீதம் போட்டி சம்பளத்திலிருந்து அபராதம் விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தலா ஒரு அபராத புள்ளி பெற்றுள்ளனர். 

 

 

மூலக்கதை