ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்ஷியல் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா

தினமலர்  தினமலர்
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்ஷியல் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா

மும்பை: அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­யைச் சேர்ந்த, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­தின் ஓர் அங்­க­மாக, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்­ஷி­யல் சர்­வீ­சஸ் உள்­ளது.இந்த, வங்கி சாரா நிதிச் சேவை நிறு­வ­னத்­தில் இருந்து, சமீ­பத்­தில், ஐந்து இயக்­கு­னர்­கள் வில­கி­யுள்­ள­னர். இந்­நி­லை­யில், நிர்­வாக இயக்­கு­ன­ரும், தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, ரமேஷ் சி பாவா, திடீ­ரென பதவி வில­கி­யுள்­ளார்.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­தின் நிதி நெருக்­கடி தான், இவர் பதவி விலக கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது.இம்­மாத துவக்­கத்­தில், இக்­கு­ழு­மம், ‘சிட்பி’க்கு, 1,000 கோடி ரூபாய் கடனை திரும்ப அளிக்க தவ­றி­யது. இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம், ஐ.டி.பி.ஐ.,க்கு, 500 கோடி ரூபாய் கடனை, திரும்ப அளிக்க முடி­ய­வில்லை என, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்­ஷி­யல் சர்­வீ­சஸ் நிறு­வ­னம் தெரி­வித்­தது.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­தின், 35 ஆயி­ரம் கோடி ரூபாய் கட­னில், பைனான்­ஷி­யல் சர்­வீ­சஸ் நிறு­வ­னத்­தின் கடன், 17 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு உள்­ளது.நெடுஞ்­சாலை திட்­டங்­களில், மத்­திய அரசு, பல ஆயி­ரம் கோடி ரூபாய் நிலுவை வைத்­துள்­ள­தால், உரிய நேரத்­தில் கடனை திரும்ப செலுத்த முடி­ய­வில்லை என, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மம் தெரி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து, நிதி திரட்­டும் நோக்­கில், 28ல் பங்கு முத­லீட்­டா­ளர்­கள் கூட்­டத்தை, இக்­கு­ழு­மம் கூட்ட உள்­ளது.

மூலக்கதை