தமிழகத்தில், ‘யமஹா மியூசிக்’ 2019ல் தயாரிப்பு துவக்கம்

தினமலர்  தினமலர்
தமிழகத்தில், ‘யமஹா மியூசிக்’ 2019ல் தயாரிப்பு துவக்கம்

சென்னை: ‘யமஹா மியூ­சிக் இந்­தியா’ நிறு­வ­னம், தமி­ழ­கத்­தில், ‘கிடார், கீ போர்டு’ உள்­ளிட்ட இசைக் கரு­வி­கள் தயா­ரிப்பை, 2019ல் துவக்க உள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் தொழிற்­சாலை, சென்னை அருகே, திருப்­போ­ரூர் தாலு­கா­வைச் சேர்ந்த, குணப்­பத்து கிரா­மத்­தில், ‘ஒன் அப் சென்னை’ தொழிற்­பேட்­டை­யில் அமைத்­துள்­ளது. இது குறித்து, யமஹா மியூ­சிக் இந்­தியா நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், தகாஷி ஹகா கூறி­ய­தா­வது: நிறு­வ­னம், 1,900 கோடி ரூபாய் முத­லீட்­டில், முதல் உற்­பத்தி கூடத்தை அமைத்­துள்­ளது. இங்கு, அடுத்த ஆண்டு உற்­பத்தி துவங்­கும். முதல் ஆண்­டில், 1 லட்­சம் கரு­வி­கள் தயா­ரிக்­கப்­படும். அதில், 20 – -30 சத­வீ­தம் ஏற்­று­மதி செய்­யப்­படும். இதே அளவு முத­லீட்­டில், இரண்­டாம் கட்ட உற்­பத்தி கூடம் அமைக்­கப்­பட்­ட­தும், ஆண்­டுக்கு, 4 லட்­சம் கிடார்­கள் மற்­றும் 3 லட்­சம் கீ போர்­டு­கள் தயா­ரிக்­கப்­படும். இந்­தி­யா­வில், தனி­யார் இசைப் பள்­ளி­க­ளு­டன் இணைந்து, இசைப் பள்­ளியை நிறு­வி­யுள்­ளோம். உள்­நாட்­டில், யமஹா இசைக் கரு­வி­க­ளுக்கு பெரும் வர­வேற்பு உள்­ள­தால், ஏற்­று­மதி குறைய வாய்ப்பு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை