பங்கு வெளியீட்டில் ‘இன்வென்ஷியா’

தினமலர்  தினமலர்
பங்கு வெளியீட்டில் ‘இன்வென்ஷியா’

புது­டில்லி : ‘இன்­வென்­ஷியா ஹெல்த்­கேர்’ நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் விண்­ணப்­பித்­துள்­ளது.

இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூல­மாக, 450 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, 125 கோடி ரூபாய் மதிப்­பில் புதிய பங்­கு­களும், நிறு­வ­னர்­கள் மற்­றும் பங்­கு­தா­ரர்­கள் வசம் இருக்­கும், 31 லட்­சத்து, 64 ஆயி­ரம் பங்­கு­களும் வெளி­யி­டப்­பட உள்ளன.

இதில், தனி­யார் பங்கு முத­லீட்டு நிறு­வ­ன­மான, ‘ஜேக்­கப் பால்ஸ்’ நிறு­வ­னர்­க­ளான, ஜானக் ஷா மற்­றும் மாயா ஷா பங்­கு­களும் அடங்­கும். இந்த பங்கு வெளி­யீட்­டின் மூல­மாக திரட்­டப்­படும் நிதியை, பாக்கி கடன்­களை தீர்க்­க­வும், பொது­வான நிர்­வா­கச் செல­வு­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது. இந்த பங்கு வெளி­யீட்டு பணி­களை, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டிஸ்’ மற்­றும் ‘சென்ட்­ரம் கேப்­பிட்­டல்’ ஆகிய நிறு­வ­னங்­கள் மேற்­கொள்ள உள்ளன.

மூலக்கதை