ஒரே நாளில், ரூ.14,500 கோடி இழந்த யெஸ் பேங்க் பங்கு முதலீட்டாளர்கள்

தினமலர்  தினமலர்
ஒரே நாளில், ரூ.14,500 கோடி இழந்த யெஸ் பேங்க் பங்கு முதலீட்டாளர்கள்

புதுடில்லி : நேற்று காலை பங்கு வர்த்­த­கத்­தில், யெஸ் பேங்க் பங்­கின் விலை, ஓராண்­டில் இல்­லாத அள­விற்கு சரிந்­த­தால், வங்­கி­யின் சந்தை மூல­த­னம், 14,452 கோடி ரூபாய் குறைந்து, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பெரும் இழப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

கடந்த, 2004ல், ராணா கபூர், அசோக் கபூர் ஆகி­யோ­ரால், யெஸ் பேங்க் துவக்­கப்­பட்­டது. தனி­யார் துறை­யில், குறு­கிய காலத்­தில், நான்­கா­வது பெரிய வங்­கி­யாக உரு­வெ­டுத்­தது. இதன் நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் அதி­கா­ரி­யாக, ராணா கபூர் இருந்து வரு­கி­றார்.
இந்­நி­லை­யில், ‘புதிய விதி­மு­றை­களின் படி, ராணா கபூர், 2019, ஜன­வ­ரி­யில் பதவி விலகி, புதி­ய­வரை நிய­மிக்க வேண்­டும்’ என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­தது. இதை­ய­டுத்து, 2021 வரை பத­வி­யில் நீட்­டிக்க அனு­ம­திக்­கு­மாறு, ராணா கபூர், ரிசர்வ் வங்­கி­யி­டம் விண்­ணப்­பித்­தார். இதை நேற்று முன்­தி­னம் ரிசர்வ் வங்கி நிரா­க­ரித்­தது. இதன் தாக்­கம், நேற்று, பங்­குச் சந்­தை­யில் எதி­ரொ­லித்­தது.

யெஸ் பேங்க் பங்­கு­கள் அதி­கம் கைமா­றி­ய­தால், அதன் விலை, ஓராண்­டில் இல்­லாத அள­விற்கு சரிந்து, சந்தை மூல­த­னம், 14,452 கோடி ரூபாய் வரை குறைய வழி வகுத்­தது. வர்த்­த­கத்­தின் இறு­தி­யில், இப்­பங்­கின் விலை, முந்­தைய வர்த்­தக தினத்தை விட, 94.05 ரூபாய் குறைந்து, 225.15ல் நிலை பெற்­றது.

விதி­மீ­றல் :
உள்­நாட்டு பணப் பரி­வர்த்­தனை விதி­மீ­றல் தொடர்­பாக, யெஸ் பேங்க், ஜி.எஸ்.டி., துறை க்கு, 38 கோடி ரூபாய் செலுத்­தி­ உள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­ உள்­ளது.

மூலக்கதை