தன்மீது குற்றம் சுமத்தியவருக்கு வேலை வழங்கிய ஜனாதிபதி மக்ரோன்!!

PARIS TAMIL  PARIS TAMIL
தன்மீது குற்றம் சுமத்தியவருக்கு வேலை வழங்கிய ஜனாதிபதி மக்ரோன்!!

தனக்கு வேலை கிடைக்கவில்லை என ஜனாதிபதியிடம் தெரிவித்த இளைஞன் ஒருவருக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் வேலை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த சனிக்கிழமை எலிசே மாளிகையில் ஊடகவியலாளர்கள் முன்பாக, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பாரம்பரிய தொழில் செய்த வலுவிழந்தவர்களைச் சந்தித்திருந்தார். அதில் 25 வயதுடைய Jonathan Jahan எனும் இளைஞன், தனக்கு வேலை இல்லை என குறிப்பிட்டார். ஆனால் அதற்கு, இம்மானுவல் மக்ரோன், 'வீதியில் இறங்கி வேலை தேடு; உணவகங்கள், கஃபேக்கள் என அனைத்து இடங்களிலும் வேலை உள்ளது!' என தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த பதில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் விஷயம் அத்தோடு முடியாமல், குறித்த Jonathan Jahan இளைஞன் பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சுயவிபரக்கோவையுடன் ஏறி இறங்கி வேலை கேட்டதாகவும், ஆனால் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
'ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நிஜ உலகில் வாழவில்லை' என குற்றம் சாட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தற்போது எலிசே மாளிகை தரப்பில் Jonathan Jahan க்கு வேலை ஏற்படுத்திக்கொடுக்க உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை Jonathan Jahan, உறுதிப்படுத்தியுள்ளார்.

மூலக்கதை