அடுத்த ரிலீஸ் எது?

தினமலர்  தினமலர்
அடுத்த ரிலீஸ் எது?

இளம் நடிகர்கள் அதிகமாக அறிமுகமாவதால், முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, முழு வீச்சில் இறங்கியுள்ளார், தனுஷ்.

உடனடியாக ஒரு வெற்றிப் படத்தை கொடுத்து, தன் இருப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அடுத்ததாக, என்னை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை, மாரி - 2 ஆகிய மூன்று படங்கள், இவர் நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன. இதில், என்னை நோக்கி பாயும் தோட்டா படம், நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வந்தது. ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்த நிலையில், அந்த படம் தான், முதலில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.

மூலக்கதை