நுால் வரத்து குறைவு: இலவச வேட்டி – சேலை உற்பத்தி பாதிப்பு

தினமலர்  தினமலர்
நுால் வரத்து குறைவு: இலவச வேட்டி – சேலை உற்பத்தி பாதிப்பு

ஈரோடு : நுால் விலை உயர்ந்து, அரசு சார்­பில் நுால் வழங்­கு­தல் குறைந்­த­தால், அர­சின் இல­வச வேட்டி, சேலை உற்­பத்தி பணி­யில் தொய்வு ஏற்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் ஏழை, எளி­யோ­ருக்கு பொங்­கல் பண்­டி­கை­யின்­போது வழங்­கு­வ­தற்­கான இல­வச வேட்டி, சேலை உற்­பத்­திக்­காக, அரசு, 520 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­து உள்­ளது. மொத்­தம், 1.50 கோடி வேட்டி, 1.50 கோடி சேலை உற்­பத்தி செய்ய, இலக்கு நிர்­ண­யித்­து உள்­ளது.

நுால் விலை :
ஈரோடு, நாமக்­கல், கோவை, திருப்­பூர், திரு­நெல்­வேலி, விரு­து­ந­கர் போன்ற மாவட்­டங்­களில் உள்ள விசைத்­தறி மற்­றும் கைத்­தறி நெசவு மூலம், இப்­பணி நடந்து வரு­கிறது. கைத்­தறி துறை மூலம், நெச­வா­ளர் கூட்­டு­றவு சங்­கங்­க­ளுக்கு நுால், கூலி வழங்கி, சங்க உறுப்­பி­னர்­கள் மூலம் வேட்டி, சேலை உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிறது.இல­வச வேட்டி, சேலை தயா­ரிப்­புக்கு, அரசு டெண்­டர் மூலம், 1 கிலோ, 161 ரூபாய் என, நுால் விலை நிர்­ண­யித்­தி­ருந்­த­னர்.

தற்­போது நுால் விலை, வெளி மார்க்­கெட்­டில் உயர்ந்து, 180 முதல், 190 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது. அரசு கொள்­மு­தல் செய்­யும் ரகம், 181 ரூபா­யாக உள்­ளது. இத­னால், செப்., மாத உற்­பத்­திக்கு, தமி­ழக அள­வில், 350 டன் நுாலுக்கு பதில், 125 டன் மட்­டுமே வரத்­தா­னது.

ஒதுக்கீடு :
இதில், ஈரோ­டுக்கு, 40 டன், திருச்­செங்­கோடு, 40 டன், கோவை, 10 டன், மீத­முள்ள நுால், விரு­து­ந­கர் மற்­றும் திரு­நெல்­வேலி மாவட்­டங்­க­ளுக்கு பிரித்து அனுப்­பப்­பட்­டுஉள்­ளது.

இது பற்றி, கைத்­தறி மற்­றும் துணி நுால் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: அரசு சார்­பில், ஈரோடு மாவட்­டத்­துக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட துணி­களை உற்­பத்தி செய்து வழங்க, சொசைட்­டி­கள் பணி­களை செய்து வரு­கின்றன. அந்­தந்த மாத ஒதுக்­கீட்­டின்­படி, நுால் பெறப்­பட்டு, நெச­வா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும். நடப்பு மாதத்­துக்கு, நுால் வரத்து குறைந்­துள்­ளது.

கூடுதல் தொகை :
நுால் விலை உயர்வு குறித்து, கைத்­தறி துறை சார்­பில் அர­சி­டம் தெரி­வித்து, கூடு­தல் தொகையை பெற முய­லும். நடப்பு மாதம் நுால் குறை­வாக வந்­துள்­ள­தால், சற்று தொய்வு ஏற்­பட்­டு உள்­ளது. ஆனால், வரும் மாதங்­களில் கூடு­தல் நுால் வழங்கி, இப்­ப­ணியை விரை­வு­ப­டுத்த, துறை ரீதி­யாக வலி­யு­றுத்­தப்­படும். பொங்­க­லுக்கு நாட்­கள் உள்­ள­தால், தேவை­யான முயற்சி மேற்­கொள்­ளப்­படும். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

மூலக்கதை