பங்கு வெளியீட்டில் டி அண்டு டி இன்ப்ரா

தினமலர்  தினமலர்
பங்கு வெளியீட்டில் டி அண்டு டி இன்ப்ரா

புது­டில்லி : கட்­டு­மான நிறு­வ­ன­மான, டி அண்டு டி இன்ப்ரா, பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, செபி­யி­டம் விண்­ணப்­பித்­துள்­ளது.

மஹா­ராஷ்­டி­ராவைச் சேர்ந்த இந்­நி­று­வ­னம், சாலை­கள், மேம்­பா­லங்­கள், பாலங்­கள் உள்­ளிட்ட கட்­டு­மான பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம்,75 லட்­சம் பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. இதன் மூலம் திரட்­டப்­படும் நிதியை, தேவை­யான உப­க­ர­ணங்­கள் வாங்­க­வும், நடை­முறை மூல­தன தேவை­க­ளுக்­கும், நிர்­வா­கச் செல­வு­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக தெரி­வித்­து உள்­ளது.

‘‘பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தன் மூலம், எங்­கள் பிராண்டை பிர­ப­லப்­ப­டுத்­த­வும், எதிர்­கால வளர்ச்­சிக்­கான சாத்­தி­யக்­கூ­று­களை பெற­வும் முடி­யும் என கரு­து­கி­றோம்” என, இந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, ஹெம் செக்­யூ­ரிட்­டிஸ் நிறு­வ­னம் ஏற்­றுள்­ளது. ஏற்­க­னவே, இந்த மாத துவக்­கத்­தில், ஸ்ரீ பஜ்­ரங் பவர், இஸ்­பத் நிறு­வ­னம், மற்­றும் ஏஞ்­சல் புரோக்­கிங் ஆகிய நிறு­வ­னங்­களும் பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­காக, செபி­யி­டம் விண்­ணப்­பித்­துள்ளன.

மூலக்கதை