இஷா அம்பானி – ஆனந்த் பிரமால் இத்தாலியில் இன்று நிச்சயதார்த்தம்

தினமலர்  தினமலர்
இஷா அம்பானி – ஆனந்த் பிரமால் இத்தாலியில் இன்று நிச்சயதார்த்தம்

மும்பை : ரிலை­யன்ஸ் குழும தலை­வர், முகேஷ் அம்­பா­னி­யின் மகள், இஷா அம்­பா­னிக்­கும், பிர­மால் குழும தலை­வர், அஜய் பிர­மால், மகன், ஆனந்த் பிர­மா­லுக்­கும், இத்­தா­லி­யில் இன்று நிச்­ச­ய­தார்த்த விழா நடை­பெற உள்­ளது.

இத்­தா­லி­யின், லேக் கோமோ நக­ரில் நடை­பெ­றும் இவ்­வி­ழாவை முன்­னிட்டு, பிர­மாண்ட ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டு உள்ளன. வரும் ஞாயிறு வரை, மூன்று நாட்­க­ளுக்கு கோலா­க­ல­மான நிகழ்ச்­சி­கள் நடை­பெற உள்ளன. இவ்­வி­ழா­வில், அர­சி­யல் தலை­வர்­கள், திரை­உலக நட்­சத்­தி­ரங்­கள், தொழி­ல­தி­பர்­கள் உள்­ளிட்­டோர் பங்கேற்பர் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த மே மாதம், மும்­பை­யில், முகேஷ் அம்­பா­னி­யின் ஆடம்­பர, ‘அன்­டி­லியா’ குடி­யி­ருப்­பில், ஆனந்த் – இஷா­வுக்கு, ‘கோர் தானா’ எனப்­படும், திரு­ம­ணத்­திற்கு முந்­தைய சடங்கு நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன. இவர்­களின் திரு­ம­ணம், வரும் டிசம்­ப­ரில் நடை­பெற உள்­ளது. கடந்த ஜூன் மாதம், முகேஷ் அம்­பா­னி­யின் மகன், ஆகாஷ் அம்­பா­னிக்­கும், ஸ்லேகா மேத்­தா­வுக்­கும், திரு­மண நிச்­ச­ய­தார்த்­தம் நடை­பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை