அன்னிய மின்னணு வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., பதிவு, ‘கெடு’ முடிகிறது

தினமலர்  தினமலர்
அன்னிய மின்னணு வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., பதிவு, ‘கெடு’ முடிகிறது

புதுடில்லி : இந்­தி­யா­வில் செயல்­படும், அமே­சான் உள்­ளிட்ட அன்­னிய மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­கள், அனைத்து மாநி­லங்­க­ளி­லும், ஜி.எஸ்.டி., பதிவு செய்­வ­தற்­கான, ‘கெடு’ இம்­மா­தத்­து­டன் முடி­வ­டை­கிறது.

இந்த நடை­மு­றை­யில் ஏற்­படும் சிர­மங்­களை தவிர்க்க, ஒரு முறை பதிவு செய்­யும் சிறப்பு சலுகை வழங்­கப்­படும் என, அன்­னிய நிறு­வ­னங்­கள் கரு­தின. இந்­நி­லை­யில், ‘‘மின்­னணு வணிக நிறு­வ­னங்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., பதி­வில் விலக்கு அளிக்­கப்­ப­ட­வில்லை,’’ என, பிரைஸ் வாட்­டர் கூப்­பர்ஸ் நிறு­வ­னத்­தின் தேசிய மறை­முக வரி­கள் பிரிவு தலை­வர், பிர­திக் ஜெயின் தெரி­வித்­து உள்­ளார்.

அத­னால், அன்­னிய மின்­னணு வணிக நிறு­வ­னங்­கள், அனைத்து மாநி­லங்­க­ளி­லும், ஜி.எஸ்.டி., பதிவு செய்து, அக்., 1 முதல், அவற்­றின் வலை­த­ளங்­கள் வாயி­லாக பொருட்­களை விற்­போ­ரி­டம், வரி வசூ­லிக்க வேண்­டும். இந்­தி­யா­வில் செயல்­படும், கூகுள், ஆப்­பிள் உள்­ளிட்ட அன்­னிய நிறு­வ­னங்­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

இதன்­படி, 2.50 லட்­சம் ரூபாய்க்கு மேல், வெளி மாநி­லங்­களில் மேற்­கொள்­ளும் விற்­ப­னைக்கு, மத்­திய மற்­றும் மாநில ஜி.எஸ்.டி.,யில், தலா, 1 சத­வீத வரி வசூ­லிக்க வேண்­டும்; இது, மாநி­லத்­திற்­குள் நடை­பெ­றும் விற்­ப­னைக்கு, 2 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டு உள்­ளது.

மூலக்கதை