நெடுஞ்சாலையில் மகிழுந்தை மெதுவாக ஓட்டியவருக்கு தண்டப்பணம்! - அவதானம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
நெடுஞ்சாலையில் மகிழுந்தை மெதுவாக ஓட்டியவருக்கு தண்டப்பணம்!  அவதானம்!!

நெடுஞ்சாலை ஒன்றில் மகிழுந்தை மெதுவாக செலுத்தியவருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்ட சம்பவம் ஒன்று Côte-d'Or இல் இடம்பெற்றுள்ளது. 
 
சாரதி ஒருவர் கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி நெடுஞ்சாலையில், மணிக்கு 80 கி.மீ வேகம் உள்ள வீதியில், மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளார். இதனால் ஜோந்தாமினர்கள் குறித்த நபருக்கு தண்டப்பணம் அறவிட்டுள்ளனர். சாரதி Dijon மற்றும் Chalon-sur-Saône ஆகிய இரு நகரங்களுக்கிடையே பயணித்துள்ளார். பின்னர் செப்டம்பர் 18 ஆம் திகதி அவருக்கு €22 யூரோக்கள் தண்டப்பணம் செலுத்தக்கோரி அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
பிரான்சில்,  R413-19 சட்டத்தின் படி, நெடுஞ்சாலையில் திடீரென வாகனத்தை மெலுவாக செலுத்துவது மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது எனவும், இதனால் போக்குவரத்து சீராக தடைப்படும் எனவும் இது தண்டப்பணம் அறவிடப்படக்கூடிய குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை