இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி..!!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி..!!

இலங்கையில் பேருந்து பயணக் கட்டணங்களை நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
 
இதன்படி நூற்றுக்கு நான்கு சதவீதத்தினால் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென அமைச்சு அறிவித்துள்ளது.
 
தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும போக்குவரத்து அமைச்சின் அதிகாரிளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே பேருந்து பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
நான்கு சதவீதத்தினால் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் ஆரம்ப கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது

மூலக்கதை