lநாட்டின் ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
lநாட்டின் ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதம், நாட்­டின் ஏற்­று­மதி, 2,784 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்­து உள்­ளார்.


இது குறித்து அவர், ‘டுவிட்­ட­ரில்’ வெளி­யிட்­டுள்ள விப­ரம்:நாட்­டின் ஏற்­று­மதி தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. ஆகஸ்­டில், ஏற்­று­மதி, 19.21 சத­வீ­தம் உயர்ந்து, 2,784 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.பெட்­ரோ­லி­யப் பொருட்­கள் தவிர்த்த ஏற்­று­மதி, 17.43 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்­ளது. இதே மாதத்­தில், கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், இறக்­கு­மதி, 25.41 சத­வீ­தம் அதி­க­ரித்து, 4,524 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.


இத­னால், வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 1,740 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது.எனி­னும், முந்­தைய ஜூலை மாதத்­து­டன் ஒப்­பி­டும் போது, ஆகஸ்­டில், வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 62 கோடி டாலர் குறைந்­துள்­ளது.நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், ஏப்., – ஆகஸ்ட் வரை­யி­லான ஐந்து மாதங்­களில், ஏற்­று­மதி, 16.13 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்­ளது.


இதே காலத்­தில், இறக்­கு­மதி வளர்ச்சி, 17.34 சத­வீ­த­மாக இருந்­தது.இவ்­வாறு, அதில்
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை