இரு மடங்கு விலை : 16 கோடிக்கு பிளாட் வாங்கிய தமன்னா

தினமலர்  தினமலர்
இரு மடங்கு விலை : 16 கோடிக்கு பிளாட் வாங்கிய தமன்னா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா மும்பையில் வசித்து வருகிறார். கடந்த மாதம் மும்பை, வெர்சோவா பகுதியில் உள்ள 22 அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் 14வது மாடியில் உள்ள ஒரு பிளாட்டை வாங்கியிருக்கிறார். அதன் ஒரு சதுர அடி விலை 80,778 ரூபாயாம். அந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட் விலையைவிட இது இரண்டு அடங்கு அதிகம் என்கிறார்கள்.

4.50 கோடி மதிப்புள்ள அந்த பிளாட்டை தமன்னா 16.60 கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முத்திரைத் தாள் கட்டணமாக மட்டும் தமன்னா 99 லட்சம் செலுத்தியுள்ளாராம். அந்த பிளாட்டிற்காக தமன்னாவுக்கு இரண்டு கார்களை நிறுத்தும் பார்க்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளதாம். தமன்னா மற்றும் அவருடைய அம்மா ரஜினி பாட்டியா பெயரில் அந்த பிளாட் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அந்த பிளாட்டின் எந்தப் பகுதியில் நின்று பார்த்தாலும் கடல் தெரியுமாம். வீட்டின் உள் அலங்காரங்களை வாங்குபவர்கள் அவர்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாமாம். உள்புற அலங்காரங்களுக்கு மட்டும் தமன்னா 2 கோடி செலவு செய்ய தயாராக இருக்கிறாராம்.

பாலிவுட் நடிகைகளுக்கு மும்பையின் பிரபலமான பகுதிகளில் பிளாட் அல்லது வீடு வாங்குவது மிகப் பெரும் ஆசை. அதற்காக தமன்னா அளவிற்கு வேறு யாரும் அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கிறார்கள்.

மூலக்கதை