ஆல்பம் குழு உருவாக்கும் படம்

தினமலர்  தினமலர்
ஆல்பம் குழு உருவாக்கும் படம்

இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற கண்டுபிடி என்கிற இசை ஆல்பத்தை எம்.சி.ரிக்கோ இசை அமைத்து இயக்கி இருந்தார். இதில் கார்த்திக் முனிஸ், சுமா பூஜாரி நடித்தனர். இந்த குழு தற்போது ஒரு சினிமாவை உருவாக்க இருக்கிறது. ரிக்கோ இயக்க, கார்த்திக் முனிஸ், சுமா பூஜாரி நடிக்கிறார்கள். இது குறித்து ரிக்கோ கூறியதாவது:

கார்த்திக்முனிஸ் நடிப்பில் மிகுந்த ஆர்வமும், திறமையும் உள்ளவர். அவரின் முன்று வருட சினிமா முயற்சியில் முதன்முதலாக அவர் என்னுடைய இயக்கத்தில் நாயகனாக அறிமுகமானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஆல்பத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ராகுல், படத்தொகுப்பாளர் எம்.எஸ்.கோபி இவர்களையே திரைப்படத்திலும் பணிபுரிய ஒப்பந்தம் செய்துள்ளேன். படத்தில் முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

மூலக்கதை