சிந்துபாத் ரிலீஸாக உதவிய விஜய்சேதுபதி

தினமலர்  தினமலர்
சிந்துபாத் ரிலீஸாக உதவிய விஜய்சேதுபதி

ஒரு படத்தில் நடிப்பதற்கே ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் நடிகர்கள் மத்தியில் விஜய்சேதுபதியின் சுறுசுறுப்பு மற்ற நடிகர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறதோ நிச்சயமாக அச்சத்தைக் கொடுக்கும். அந்தளவுக்கு ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துக் கொண்டு மாதத்துக்கு ஒரு படத்தில் நடித்து முடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

அதேநேரம் அவர் நடித்த படங்கள் திட்டமிட்டபடி திரைக்கு வருவதிலும் சிக்கல் நீடிக்கிறது. ஒவ்வொரு படம் ரிலீஸ் நேரத்தில் பிரச்சனைகளை சந்திப்பது வாடிக்கையாக உள்ளது. அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடித்திருக்கும் 'சிந்துபாத்' படம் கடந்த வாரம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கடந்தவாரம் படம் ரிலீசாகவில்லை.

இந்நிலையில் விஜய்சேதுபதி ஒரு கோடி பண உதவி செய்து சிந்துபாத் படம் திரைக்கு வர உதவி செய்துள்ளார். 96 படம் திரைக்கு வரும்போது ஏற்பட்ட பிரச்சனையில் 3 கோடி கொடுத்து உதவினார்.

இந்நிலையில் சிந்துபாத் படத்துக்கு 1 கோடி கொடுத்துள்ளார். காரணம்... இந்தப்படத்தின் இயக்குநர் அருண்குமார் விஜய்சேதுபதியின் நண்பர். அதோடு சிந்துபாத் படத்தில் விஜய்சேதுபதியின் மகனும் நடித்திருக்கிறார். இந்த செண்ட்டிமெண்ட் காரணமாகவே 1 கோடி கொடுத்துள்ளார்.

மூலக்கதை