தங்கம் விலை தொடர்ந்து உச்சம் : சவரன் ரூ.344 உயர்வு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை தொடர்ந்து உச்சம் : சவரன் ரூ.344 உயர்வு

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே 26 ஆயிரத்தில் வர்த்தகமாகி வரும் தங்கம் விலை, இன்று(ஜூன் 25) ரூ.344 உயர்ந்து சவரன் ரூ.26,464க்கு விற்பனையாகிறது.

சென்னை, தங்கம் வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,308-க்கும் சவரன் ரூ.344 உயர்ந்து ரூ.26,464-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.34,640க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.41.40க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதாலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாலும் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்து வருவதாக தங்கம் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை