பன்றிக்கு நன்றி சொல்லும் படம்

தினமலர்  தினமலர்
பன்றிக்கு நன்றி சொல்லும் படம்

ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம் பன்றிக்கு நன்றி சொல்லி.

விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். நிஷாந்த், விஜய் சத்யா, செல்லா பாலாஜி, மு சந்திரகுமார், வியன், பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.படம் பற்றி இயக்குனர் பாலா அரன் கூறியதாவது:

படத்தின் கதைகளம் க்புதையல் வேட்டையைக் மையமாக கொண்டது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை. பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த, சுவராசியமான பல திருப்பங்களுக்கு பின்னர் அவர்கள் அந்த சிலையை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

முழுக்க முழுக்க நகைச்சுவையோடு உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கப்பட்டுள்ளது என்றார்..

மூலக்கதை