30 வருடங்களை முடித்த கரகாட்டக்காரன்

தினமலர்  தினமலர்
30 வருடங்களை முடித்த கரகாட்டக்காரன்

தமிழ் சினிமாவில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்ற படம் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா மற்றும் பலர் நடித்து இதே நாளில் 30 வருடங்களுக்கு முன்பு 1989ல் வெளிவந்த படம்தான் கரகாட்டக்காரன்.

மாங்குயிலே பூங்குயிலே... என்ற ஒரு பாடலும், கவுண்டமணி, செந்தில் நடித்த வாழைப்பழக் காமெடியும் இந்தப் படத்தை பட்டி, தொட்டி எங்கும் சென்று சேர்த்தன. தமிழ் சினிமாவில் அதற்கு முன் அப்படி ஒரு வரலாற்று வசூல் நடந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு வசூல் சாதனை புரிந்தது.

மதுரையில் மட்டும் ஒரு தியேட்டரில் ஒரு வடத்திற்கும் மேல் ஓடிய படம். பல ஊர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. அந்தக் காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடித்த படங்கள் செய்யாத சாதனையைக் கூட ராமராஜன் செய்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 80களின் இறுதியிலும், 90களின் துவக்கத்திலும் ராமராஜன் பல வசூல் படங்களைக் கொடுத்த ஒரு நடிகர்.

நம் மண்ணின் வாழ்க்கை முறையை கிராமியக் கலைகளைப் பற்றிய ஒரு படத்தை உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் படத்தை எத்தனை ஆண்டு காலத்திற்கும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மூலக்கதை