'ஆதித்ய வர்மா' டீசர் வந்தும் 'வர்மா' டீசர் இருக்கிறதே ?

தினமலர்  தினமலர்
ஆதித்ய வர்மா டீசர் வந்தும் வர்மா டீசர் இருக்கிறதே ?

தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக 'வர்மா' என்ற பெயரில் ஆரம்பமானது. படம் முடிந்த பின் படத்தைப் போட்டுப் பார்த்த தயாரிப்பாளர் மற்றும் நாயகன் துருவ்வின் அப்பா விக்ரம் ஆகியோர் படம் ஒரிஜனல் தெலுங்குப் படம் போல இல்லை என்று குற்றம் சொல்லி அந்தப் பட வெளியீட்டையே நிறுத்திவிட்டார்கள்.

அடுத்து தெலுங்கு 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இணை இயக்குனரான கிரிசய்யா என்பவரை இயக்குனராக நியமித்து, 'வர்மா' என்ற பெயரை 'ஆதித்ய வர்மா' என மாற்றி மீண்டும் புதிதாக படப்பிடிப்பு நடத்தி முடித்தார்கள்.

இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு 'ஆதித்ய வர்மா' படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள். ஒரிஜனல் தெலுங்குப் படத்தின் அக்மார்க் ரீமேக்காக டீசர் உள்ளது.

'ஆதித்ய வர்மா' டீசர் வெளிவந்த பின்னும் 'வர்மா' டீசரை இன்னும் யு டியுபில் இருந்து நீக்காமல் உள்ளார்கள். புது டீசரைப் பார்த்துவிட்டு பழைய டீசரையும் வந்து பார்த்து சிலர் பழைய டீசர் நன்றாக இல்லை என சொல்லிவைத்தாற் போல கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒருவேளை இப்படிப்பட்ட கமெண்ட்டுகளுக்காகத்தான் பழைய டீசரை நீக்காமல் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

மூலக்கதை