தொழில்நுட்ப துறை பிரதிநிதிகள் சந்திப்பு

தினமலர்  தினமலர்
தொழில்நுட்ப துறை பிரதிநிதிகள் சந்திப்பு

­புது­டில்லி:வரப்­போ­கும் பட்­ஜெட்டை முன்­னிட்டு, தக­வல் தொழில்­நுட்­பம், ஸ்டார்ட் அப் உள்­ளிட்ட துறை­க­ளைச் சேர்ந்த அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­கள், மத்­திய நிதித் துறை இணை
அமைச்­சர், அனு­ராக் தாகூரை நேற்று சந்­தித்­த­னர்.

இந்த சந்­திப்­பின் போது, வரி விதிப்­பு­கள், டிஜிட்­டல் பொரு­ளா­தா­ரம் உள்­ளிட்ட பல்­வேறு விஷ­யங்­கள் குறித்து, ஆலோ­சனை நடத்­தப்­பட்­டது.இது குறித்து, நிதி­ய­மைச்­ச­கம் தெரி­வித்­துள்­ள­தா­வது:


இந்த சந்­திப்­பின்­போது பங்­கேற்­ற­வர்­கள், பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்­கி­னர். குறிப்­பாக ஏஞ்­சல் டேக்ஸ், அசெம்­பிளி தயா­ரிப்பு இடை­யே­யான வரி விகித முரண்­பா­டு­கள், வரிச் சலு­கை­கள் தொடர்­வது குறித்து, கருத்­து­களை தெரி­வித்­த­னர். இந்த சந்­திப்­பில், நிதி­ய­மைச்­ச­கம், மின்­னணு மற்­றும் தக­வல் தொழில்­நுட்ப அமைச்­ச­கம், தொலை தொடர்பு அமைச்­ச­கம், மத்­திய நேரடி வரி­கள் ஆணை­யம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் பங்­கேற்­ற­னர்.

மூலக்கதை