பாக்.,கிலிருந்து இறக்குமதி சரிந்தது

தினமலர்  தினமலர்
பாக்.,கிலிருந்து இறக்குமதி சரிந்தது

புது­டில்லி:பாகிஸ்­தா­னி­லி­ருந்து, இந்­தியா இறக்­கு­மதி செய்­வது, மார்ச் மாதத்­தில், 92 சத­வீ­தம் சரிந்­துள்­ளது.புல்­வாமா பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்­குப் பின், பாகிஸ்­தா­னி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யா­கும் அனைத்­துப் பொருட்­க­ளுக்­கும், 200 சத­வீ­தம் சுங்க வரி அதி­க­ரிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, மார்ச் மாதத்­தில், இந்­தி­யா­வுக்­கான இறக்­கு­மதி, 92 சத­வீ­தம் அள­வுக்கு சரிந்­துள்­ளது.பிப்­ர­வரி 16ல், புல்­வாமா தாக்­கு­தலை அடுத்து, பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை, இந்­தியா எடுத்­தது. பாகிஸ்­தா­னி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பருத்தி, பழங்­கள், சிமென்ட், பெட்­ரோ­லி­யப் பொருட்­கள் என, அனைத்து பொருட்­க­ளின் மீதும், 200 சத­வீ­தம் சுங்க வரி அதி­க­ரிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, இறக்­கு­மதி பாதிக்­கப்­பட்­டுள்­ளது.மேலும், பாகிஸ்­தா­னுக்­கான ஏற்­று­ம­தி­யும் மார்ச் மாதத்­தில், 32 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்து விட்­டது.

மூலக்கதை