இந்தியா – சீனா வர்த்தகம் ரூ. 6.93 லட்சம் கோடி

தினமலர்  தினமலர்
இந்தியா – சீனா வர்த்தகம் ரூ. 6.93 லட்சம் கோடி

பீஜிங்:இந்­தியா – சீனா இடை­யே­யான வர்த்­த­கம், நடப்பு ஆண்­டில், 100 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக, அதா­வது, இந்­திய ரூபாய் மதிப்­பில், 6.93 லட்­சம் கோடி ரூபா­யாக இருக்­கும் என, சீனா­வுக்­கான இந்­திய துாதர் தெரி­வித்­துள்­ளார்.

பீஜிங்­கில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்ற, சீனா­வுக்­கான இந்திய துாதர், விக்­ரம் மிஸ்ரி கூறி­ய­தா­வது:கடந்த ஆண்­டில், இந்­தியா – சீனா இடை­யே­யான வர்த்­த­கம்,95 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக இருந்­தது. இது, நடப்­பாண்­டில்,100 பில்­லி­யன் டால­ராக அதி­க­ரிக்­கும் என, கரு­து­கி­றேன்.


இந்­தி­யா­வில் சீன நிறு­வ­னங்­க­ளான, ‘சயோமி, ஒப்போ’ என, பல்­வேறு நிறுவனங்­கள் வளர்ச்சி கண்­டுள்­ளன. அதே­போல், இந்­தி­யா­வி­லி­ருந்­தும் பல்­வேறு நிறு­வ­னங்­கள், சீனா­வில் வளர்ச்சி கண்­டுள்­ளன.சீனா­வில் மட்­டும், 125 இந்­திய நிறு­வ­னங்­கள், மிக வெற்­றி­க­ர­மாக செயல்­பட்டு வருகின்­றன.இவ்­வாறு, அவர் கூறி­னார்.

மூலக்கதை