பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் தொகை மூன்று வருடங்களில் மூன்று…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் தொகை மூன்று வருடங்களில் மூன்று…

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் தொகை மூன்று வருடங்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 2 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கடன் தொகையை வசூலிப்பது குறித்து மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கடனை விரைந்து வசூலிக்க கடன் வசூல் தீர்ப்பாயம் என்று 6 அமைப்புகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேள்வி நேரத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் வங்கிகளில் கணக்கு வைத்துவிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோராமல் இருக்கும் தொகை மட்டும் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் வரை 5 ஆயிரத்து 124 கோடியே 98 லட்சமாகும் என அவர் தெரிவித்தார்.

மூலக்கதை