விடு­முறை பயண கடன் வச­தி­யில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்

தினமலர்  தினமலர்
விடு­முறை பயண கடன் வச­தி­யில் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்

கோடை விடு­முறை பய­ணங்­களை மேற்­கொள்­ளும் போது தேவை­யான திட்­ட­மி­ட­லில், நிதி வச­தி­யை­யும் முக்­கி­ய­மாக கருத வேண்­டும். இத்­த­கைய பய­ணத்­திற்­காக ஏற்­க­னவே திட்­ட­மிட்டு சேமித்­தி­ருக்­க­வில்லை எனில், விடு­முறை கால கடன் ­வ­ச­தியை நாட­லாம். வங்­கி­கள் மற்­றும் நிதி நுட்ப நிறு­வ­னங்­கள் இத்­த­கைய கடன்­களை அளிக்­கின்­றன. இந்த வச­தியை நாடும் போது மன­தில் கொள்ள வேண்­டிய அம்­சங்­கள்:

தேவை­யான அளவு கடன்:


பொது­வாக, வாழ்­வி­யல் கார­ணங்­க­ளுக்­கான கடன் வச­தியை நாடா­மல் இருப்­பதே நல்­லது. எனி­னும் தவிர்க்க இய­லாத சூழ­லில், விடு­முறை பய­ணத்­திற்­கான கடன் வச­தியை பெறும் நிலை இருந்­தால், தேவை­யான அளவு மட்­டுமே கடன் வாங்க வேண்­டும். மற்ற கடன்­க­ளோடு சேர்த்து மாதத்­த­வணை சம்­ப­ளத்­தில், 50 சத­வீ­தத்­திற்கு மிகா­மல் இருக்க வேண்­டும்.


கட­னுக்­கான கால அளவு:


விடு­முறை பய­ணத்­திற்­காக, முத­லீட்­டில் கை வைப்­ப­தை­விட கடன் வச­தியை நாடு­வது
ஏற்­றது தான். ஆனால், கட­னுக்­கான கால அளவை சரி­யாக தேர்வு செய்ய வேண்­டும். குறு­கிய காலம் எனில் வட்டி அதி­கம் இருக்­க­லாம். ஆனால், திரும்ப செலுத்­தும் தொகை குறை­வாக இருக்­க­லாம்.


கடன் நிபந்­த­னை­கள்:



கடனை திரும்பி செலுத்­து­வது தொடர்­பான விதி­மு­றை­கள் மற்­றும் நிபந்­த­னை­களை
கவ­னிக்க வேண்­டும். இவற்­றில் சாத­க­மான அம்­சங்­களை கொண்ட வங்­கியை தேர்வு செய்ய வேண்­டும். ஒரு சில வங்­கி­கள் முன்­கூட்­டியே பணம் செலுத்­து­வ­தற்கு அப­ரா­தம் விதிக்­க­லாம்.


செலவு கணக்கு:



விடு­மு­றைக்­கான தொகை கிடைத்­து­விட்­ட­தால் இஷ்­டம் போல செலவு செய்­யக்­கூ­டாது. பய­ணத்­திற்கு என்று தெளி­வான செலவு பட்­ஜெட்டை வகுத்­துக்­கொள்ள வேண்­டும். அது அனைத்து செல­வு­க­ளை­யும் உள்­ள­டக்­கி­யி­ருக்க வேண்­டும். இந்த பட்­ஜெட்டை மீறா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டும்.


காப்­பீடு அவ­சி­யம்:


விடு­மு­றைக்­கான காப்­பீடு வசதி இப்­போது மெல்ல பிர­ப­ல­மாகி வரு­கிறது. உங்­கள் பய­ணத்­திற்கு பொருத்­த­மான பயண காப்­பீடு எடுத்­துக்­கொண்­டால், எதிர்­பா­ராத நெருக்­க­டி­கள் குறித்து கவலை இல்­லா­மல் இருக்­க­லாம். குறிப்­பாக, வெளி­நாட்டு பய­ணம் எனில் இது மிக­வும் அவ­சி­யம்.

மூலக்கதை