தனி நபராக போராடி அணிக்கு வெற்றியை தேடித் தந்த பொல்லார்ட்!

PARIS TAMIL  PARIS TAMIL
தனி நபராக போராடி அணிக்கு வெற்றியை தேடித் தந்த பொல்லார்ட்!

 பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட்டின் அதிரடி ஆட்டம் காரணமாக மும்பை அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

 
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்று இரவு 8.00 மணிக்கு வான்கடே மைதானத்தில் ஆரம்பமானது.
 
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பொல்லார்ட் களத்தடுப்பை தேர்வு செய்ய பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 197 ஓட்டங்களை பெற்றது.
 
198 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி சார்பில்  டீகொக் மற்றும் சித்தீஷ் லேட் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாட மும்பை அணியின் முதல் விக்கெட் 28 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.
 
அதன்படி சித்தீஷ் லேட் 3.4 ஆவது ஓவரில் 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2 ஆவது விக்கெட்டுக்காக சூரியகுமார் யாதவ் களமிறங்கி டீகொக்குடன் ஜோடி சேர்ந்து ஆடிவர மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களை பெற்றது.
 
டீகொக் 16 ஓட்டத்துடனும், சூரியகுமார் யாதவ் 19 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். எனினும் 7.4 ஆவது ஓவரில் சூரிய குமார் யாதவ் 21 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, டீகொக்கும் 8.5 ஆவது ஓவரில் 24 ஓட்டத்துடனும், அடுத்து வந்த கிஷ்ணா 12 ஆவது ஓவரின் நிறைவில் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர் (94-4).
 
தொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்காக பாண்டியாவுடன் கைகோர்த்த ரஸல் அதிரடி காட்ட ஆரம்பிக்க மும்பை அணி 15 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 135 ஓட்டங்களை குவித்தது.
 
பொல்லார்ட் 41 ஓட்டத்துடனும் பாண்டியா 19 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இந் நிலையில் பாண்டியா 15.1 ஆவது ஓவரில் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் மில்லரிடம் பிடிகொடுத்து வெளியேற, அடுத்து வந்த குர்னல் பாண்டியாவும் ஒரு ஓட்டத்துடன் அதே ஓவரில் ஆட்டமிழந்தார் (140-6).
 
ஒரு கடத்தில் மும்பை அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 54 ஓட்டங்கள் என்ற நிலையிருந்தது. ஆடுகளத்தில் பொல்லார்ட் மற்றும் அல்ஸாரி ஜோசப் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
 
இந் நிலையில் பொல்லார்ட் 16 ஆவது ஓவரின் முடிவில் மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்டு 7 ஆறு ஓட்டம் ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.
 
அத்துடன் மும்பை அணிக்கு 12 பந்துகளுக்கு 32 ஓட்டம் என்ற நிலையுமிருக்க 19 ஆவது ஓவரை எதிர்கொண்ட பொல்லார்ட் அந்த ஓவரில் மாத்திரம் 17 ஓட்டங்களை விளாசித் தள்ள, இறுதி 6 பந்துகளுக்கு 15 ஓட்டம் என்ற நிலையானது.
 
20 ஆவது ஓவரின் முதல் பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தை பொல்லார்ட் விளாசித் தள்ளினார் எனினும் அது நோபாலாக அமைந்தது. இதனிடையே அடுத்த பந்திலும் ஒரு நான்கு ஓட்டத்தை விளா 5 பந்துகளுக்கு 4 ஓட்டம் என்ற நிலையாகியது.
 
இந் நிலையில் அடுத்த பந்தையும் உயர்த்தியடித்த பொல்லார்ட் மொத்தமாக 31 பந்துகளில் 83 ஓட்டத்துடனும் மில்லிரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
 
இதனால் போட்டி மறுபடியும் சூடு பிடிக்க இறுதியாக ஒரு பந்துக்கு இரண்டு ஓட்டம் என்றாக அல்ஸாரி ஜோசப் இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து மும்பையின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
 
இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து பஞ்சாப் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது. 
 
பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி 3 விக்கெட்டுக்களையும், அஷ்வின், ராஜ்போர்ட் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

மூலக்கதை