கொழும்பிற்கு காத்திருக்கும் ஆபத்து! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்பிற்கு காத்திருக்கும் ஆபத்து! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
வளிமண்டவியல் திணைக்களம் இது தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளது.
 
அதற்கமைய கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
38 தொடக்கம் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அத்துடன் இலங்கையின் பல பாகங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
சோர்வு, களைப்பு என்பனவற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு பொது மக்கள் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
வடமேற்கு, வட மத்திய, கிழக்கு மாகாணம், கம்பஹா, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
 

மூலக்கதை