பிரித்விராஜ் வைத்த சஸ்பென்ஸ் விஜய்சேதுபதி பற்றியா..?

தினமலர்  தினமலர்
பிரித்விராஜ் வைத்த சஸ்பென்ஸ் விஜய்சேதுபதி பற்றியா..?

மலையாள நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து, லூசிபர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. நாளை மறுநாள் (மார்ச்-22) அபுதாபியில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

இந்த விழா குறித்து பிரித்விராஜ் ஒரு வீடியோவில் குறிப்பிடும்போது, இதுவரை சொன்ன விஷயங்கள் தவிர்த்து முக்கியமான ஒரு சஸ்பென்ஸ் ஒன்றும் இந்த படத்தில் இருக்கிறது. அது இசை வெளியீட்டு விழா அன்று வெளியிடப்படும் கூறியுள்ளார்.

இந்தப்படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று முன்பு சொல்லப்பட்டது. அதுதான் அந்த சஸ்பென்ஸ் ஆக இருக்கும் என பெரும்பாலோனோர் கூறி வருகின்றனர். இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் யாரோ ஒருவர் மூலம் இந்த தகவல் முன்கூட்டியே கசிந்து விட்டது என்றும் சொல்லப்படுகிறது.

மூலக்கதை