ஏப்ரலில் ஓவியாவின் இரண்டு படங்கள் ரிலீஸ்

தினமலர்  தினமலர்
ஏப்ரலில் ஓவியாவின் இரண்டு படங்கள் ரிலீஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி, முனி-2, முனி-3 ஆகிய படங்களை படத்தை அடுத்து 'முனி-4 அதாவது காஞ்சனா-3' என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஓவியாவும், வேதிகாவும் நடித்துள்ளனர். இதற்கு முந்தைய பாகங்களில் நடித்த கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், தேவதர்ஷிணி ஆகியோர் இந்த படத்திலும் தொடருகிறார்கள். 90 எம்.எல். ஆபாசப்படத்தில் நடித்து பெயரைக்கெடுத்துக் கொண்ட ஓவியாவினால் காஞ்சனா 3 படத்தின் வெற்றி பாதிக்கும் என்று ஏற்கனவே கலக்கத்தில் இருக்கிறார் லாரன்ஸ்.

ரதீஷ் இயக்கத்தில் ப்ருத்விராஜ், சிங்கம்புலி நடித்ததுள்ள கணேஷா மீண்டும் சந்திப்போம் என்ற படத்தில் ஓவியாவும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஜன., 14ம் தேதி வெளியானது. தற்போது, இந்த டீசருக்கு 10 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒரே மாதத்தில் ஓவியா நடித்த இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

மூலக்கதை