சுப்பர் ஓவரில் போராடித் தோற்ற இலங்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
சுப்பர் ஓவரில் போராடித் தோற்ற இலங்கை!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவரில் 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
 
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
 
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
துடுப்பாட்டத்தில் இலங்கை அணிசார்பில் கமிந்து மென்டிஸ் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து 135 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
 
இறுதி ஓவரில் வெற்றி பெறுவதற்காக 5 ஓட்டங்கள் தேவையான நிலையில், இறுதி ஓவரை வீசிய இசுறு உதான 4 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து சுப்பர் ஓவருக்காக முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 15 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
 
பதிலுக்கு 15 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை அணி 05 ஓட்டங்களைப் பெற்று 10 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

மூலக்கதை