ஐஎஸ்எல் கால்பந்து தொடர் பெங்களூரு எப்சி சாம்பியன்

தினகரன்  தினகரன்
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் பெங்களூரு எப்சி சாம்பியன்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூரு எப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவா எப்சி அணியை வீழ்த்தி  முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதைத் தொடர்ந்து, கூடுதல் நேரம்  வழங்கப்பட்டது. இதில் பெங்களூரு அணி வீரர் ராகுல் ஷங்கர் பெகே பந்தை அபாரமாக ‘ஹெட்’ செய்து கோல் போட்டார் (116வது நிமிடம்). பெகே ஆட்ட நாயகன் விருதும்,  கோவா அணி வீரர் பெரான் கோரோமினஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். மும்பை கால்பந்து அரங்கில் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர் பெங்களூரு எப்சி வீரர்கள்.சிறந்த கோல் கீப்பராக பெங்களூரு எப்சி அணியின் குர்பிரீத் சிங் சாந்து தேர்வு செய்யப்பட்டார். வளரும் இளம் நட்சத்திரமாக கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி அணியின் சாஹல் அப்துல் சமத் விருது பெற்றார். வெற்றிக்கு உதவும் வகையில் பந்தை சிறப்பாக கடத்தியதற்கான விருது மும்பை சிட்டி எப்சி வீரர் அர்னால்டு இசோகோவுக்கு வழங்கப்பட்டது.

மூலக்கதை