ஏலத்தில் விற்பனையாகமல் இருந்த Johnny Hallyday இன் மகிழுந்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஏலத்தில் விற்பனையாகமல் இருந்த Johnny Hallyday இன் மகிழுந்து!!

பாடகர் Johnny Hallyday இன் மகிழுந்து ஒன்று, ஏலத்தில் விற்பனையாகாமல் இருந்துள்ளது. 
 
Johnny Hallyday இன் Porsche  928 S4 GT ரக மகிழுந்து, €90,000 இல் இருந்து €110,000 கள் வரை மதிப்பிடப்பட்டு ஏலத்தில் விடப்பட்ட நிலையில், குறித்த மகிழுந்து விற்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Aguttes ஏல விற்பனை நிறுவனத்திடம் விற்பனைக்கு வந்த இந்த மகிழுந்து, போதிய ஏல விற்பனைத் தொகை கோரப்படாததால் மகிழுந்து விற்கப்படவில்லை. குறித்த மகிழுந்து 1991 ஆம் ஆண்டு Johnny Hallyday இனால் புத்தம் புதிதாக வாங்கபட்டது. பின்னர் பலரின் கைகளுக்கு விற்கப்பட்டு, மீண்டும் Johnny Hallyday இடமே வந்து சேர்ந்திருந்தது. 
 
அதேவேளை, கடந்தவருடம் Johnny Hallyday இன் மகிழுந்தான, Ferrari 512 TR மகிழுந்து €240,000 களுக்கு ஏலத்தில் விற்பனையானது. இந்த தொகை, எதிர்பார்த்திருந்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
தவிர, ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இடம்பெற்றிருந்த இந்த ஏல விற்பனையில் Citroën நிறுவனத்தின் Victoria எனும் 1939 ஆம் வருட மகிழுந்து €135,000 எனும் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்துக்கு விற்பனையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை