இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் காய்ச்சலால் பாதியிலேயே விலகினார் செரீனா

தமிழ் முரசு  தமிழ் முரசு
இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் காய்ச்சலால் பாதியிலேயே விலகினார் செரீனா

கலிபோர்னியா: காய்ச்சல் காரணமாக இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் டோர்னமென்ட்டில் முகுருசாவுக்கு எதிரான போட்டியில் இருந்து 2வது செட்டின் போது செரீனா வில்லியம்ஸ் விலகிக் கொண்டார். கலிபோர்னியாவில் நடந்து வரும் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் டோர்னமென்டின் 2வது சுற்றில் நேற்று அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும், ஸ்பெயினின் இளம் வீராங்கனை காப்ரின் முகுருசாவும் மோதினர்.

துவக்கத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய செரீனா, 3-0 என முதல் செட்டில் முன்னிலையில் இருந்தார். ஆனால் அதன் பின்னர் முகுருசா தொடர்ச்சியாக 6 கேம்களை கைப்பற்றி, 6-3 என்ற கணக்கில் முதலாவது செட்டில் வெற்றி பெற்றார்.

2வது செட்டின் முதல் கேமும், முகுருசா வசமானது. அப்போது, ‘உடல் நிலை சரியில்லை என்பதால் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்’ என்று செரீனா நடுவரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து முகுருசா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
வைரஸ் காய்ச்சல் காரணமான செரீனாவால் இப்போட்டியில் ஆட முடியவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன. செரீனா கூறுகையில், ‘‘முறையாக மருந்துகள் எடுத்துக் கொண்டு, நம்பிக்கையுடன்தான் ஆட வந்தேன்.

துவக்கத்தில் நன்றாகத்தான் உணர்ந்தேன். ஆனால் நேரம் ஆக, ஆக மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டேன்.

பயிற்சியாளரை அழைத்து, ஆலோசித்த பின்னர், ஆட்டத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என நடுவரிடம் தெரிவித்து விட்டேன்’’ என்றார்.
குழந்தை பிறந்த பிறகு சர்வதேச டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்பிய செரீனா, கடந்த ஜனவரியில் ஆஸி.

ஓபன் கிராண்ட்ஸ்லாம், காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இண்டியன் வெல்ஸ் முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அசரென்காவை 7-5, 6-3 என வீழ்த்தி, செரீனா 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

இப்போட்டி குறித்து முகுருசா கூறுகையில், ‘‘இது எல்ேலாருக்கும் நடப்பதுதான்.

அடுத்த போட்டியில் சந்திப்போம் செரீனா’’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை