அஸ்லான்ஷா ஹாக்கி மன்பிரீத் சிங் கேப்டனாக தேர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அஸ்லான்ஷா ஹாக்கி மன்பிரீத் சிங் கேப்டனாக தேர்வு

புதுடெல்லி: மலேசியாவில் வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க உள்ள இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. எனவே இந்த தொடரில் இளம் வீரர்களை நம்பி இந்திய அணி இறங்கவுள்ளது.

இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று தேர்வு செய்யப்பட்டது. அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங், துணை கேப்டனாக சுரேந்தர் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனுபவம் வாய்ந்த ஆகாஷ்தீப், ஹர்மன்பிரீத் உட்பட 5 மூத்த வீரர்கள் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.   வரும் 23ம் தேதி இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணி கோல்கீப்பர்கள்: ஜேஷ் மற்றும் கிருஷ்ணன்.
டிபெண்டர்ஸ்: குரீந்தர் சிங், சுரேந்திரகுமார், வருண்குமார், நீரேந்திர லக்ரா, அமித் ரோஹிதாஸ், கோத்தாஜித் சிங்.


மிட்ஃபீல்டர்ஸ்: ஹர்திக் சிங், நீலகண்ட ஷர்மா, சுமீத், விவேக் சாகர், மன்பிரீத் சிங்.
ஃபார்வர்ட்ஸ்: மன்தீப் சிங், சிம்ரன்ஜித் சிங், குர்ஜான்ட் சிங், ஷிலாநந்த் லக்ரா, சுமீத்குமார்.

.

மூலக்கதை